yarlathirady.com

வடக்கு ஆளுநரின் மக்கள் குறைகேள் சந்திப்பு!

[2025-03-06 12:43:38] Views:[10]

நேற்றையதினம் (05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.


நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார்.


வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். நெடுந்தீவு துறைமுகம், கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர். வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்த வேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.