yarlathirady.com

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்விழா தொடர்பான அறிவித்தல்.

[2025-01-26 22:10:46] Views:[10]

யாழ். பல்கலைக்கழகத்தின் 50வது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட் தேரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைபீடத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பொன் விழா நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் நாள் நிகழ்வு காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது பொன் விழா தொடர்பான நூல் ஒன்று வெளியீடு செய்யப்படவுள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வாக கலைப்பீடத்தைச் சேர்ந்த பழைய மாணவர்களின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதின் மென்பந்து, கரப்பந்து, உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கும் பாரம்பரிய உள்ளக, வெளியக விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.

இறுதி நாள் நிகழ்வாக பல்கலைக்கழக கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குருதிக் கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து அனைவருக்குமான இராப்போசன நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.