yarlathirady.com

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.!

[2025-01-13 13:16:45] Views:[15]

கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்பாணம், குருநகர் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் (11) கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற மீனவர்கள் இருவர் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று (12) ஒருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகவீனமுற்ற அல்போன்சு சந்தியாபிள்ளை என்ற 58 வயதான தொழிலாளியை ஊர்காவற்துறை கடற்கரைக்கு கொண்டுவந்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அதன் போது, தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டதை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.