yarlathirady.com

சிவனொளிபாதமலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிளீன் ஶ்ரீலங்கா திட்டம்..!

[2025-01-04 10:40:29] Views:[10]

சிவனொளிபாதமலை பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் நேற்று(03) நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகளால் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வாகனங்களில் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றவும் மற்றும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சிவனொளிபாதமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து நல்லதண்ணி பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நல்லதண்ணி பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும், குறித்த அறிக்கை கிடைக்கும் வரை வாகனங்களின் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.