சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!!
[2025-01-03 21:11:55] Views:[10]
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டு நிலுவையில் உள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இணையவழி முறையின் ஊடாக சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.










