yarlathirady.com

புதிய இராணுவத் தளபதியிடமிருந்து இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு..!!

[2025-01-03 10:52:19] Views:[10]

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து இராணுவ தரப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 451 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3570kg கஞ்சா, 1040kg கேரள கஞ்சா, சுமார் 11kg ஐஸ் மற்றும் 61kg ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15 000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 7340kg பீடி இலைகளும் யால காப்புக்காடு, உடவலவ பிரதேசங்களில் கிட்டத்தட்ட 3459 kg கஞ்சாவும் 440,000 கஞ்சா செடிகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.