கிணற்றிலிருந்து இனம்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு: யாழில் பரபரப்பு சம்பவம்..!!
[2025-01-03 10:37:16] Views:[10]
நேற்று (02) மாலை சாவகச்சேரி போலீஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் கிணறொன்றுக்குள் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அங்குள்ள வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப மாது ஒருவரின் சடலம் மிதப்பதைக் பார்த்து போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










