யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன்னால் வாள்வெட்டு தாக்குதல்: பிரதான சந்தேக நபர் இன்று கைது..!!
[2025-01-02 21:10:07] Views:[11]
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றிக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வருடம்(2024) மே மாதம் 30ஆம் திகதி வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, மூன்று பேர் நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அன்றையதினம் மூவரில் இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதுடன் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்றைய தினம்(02) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம், ஆரியகுளத்துக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










