பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தினால் பரிதாபமாக உயிரிழப்பு..!!
[2025-01-02 21:02:37] Views:[9]
மோட்டார் சைக்கிள் விபத்தினால் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்திவைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினுடம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










