பல மில்லியன் பெருமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!
[2025-01-02 10:41:19] Views:[12]
இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 23 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (02) அதிகாலை 0530 மணியளவில் பளை, தம்பகாமம், அந்தக்கரை பகுதியில் அமைந்துள்ள நெல்லியன் அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தாவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேகத்திக்கிடமாக பயணித்த இருவரை சோதனை செய்யத போது அவர்களிடமிருந்து 12 பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்த 23 கிலோ கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொட்டலங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










