yarlathirady.com

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் நெடுந்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு!

[2025-01-01 17:15:23] Views:[11]

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த நிலையில், நெடுந்தீவு மீனவர்களின் சிறிய படகுகளில் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவில் இருந்து இன்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தமையால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளிப்பதை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டனர்.

பின்னர் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது மீட்க்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

அதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.