இலங்கையில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை..!!
[2025-01-01 14:39:11] Views:[10]
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் நோக்கில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பை அவர் கடந்த மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










