யாழில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய நபர் கைது...!!
[2025-01-01 14:27:04] Views:[10]
கடந்த 30 ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் தேக்கங்காடு பகுதியில் குறித்த வாகனத்தை மறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சுமார் 6KG கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனத்தையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










