தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் மாவை – பதில் தலைவர் சி.வி.கே
[2024-12-29 11:34:24] Views:[10]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார் என்றும், இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என்றும் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சின் பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் அறிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (28) நடைபெற்ற தமிழரசுக் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்,
மேலும், மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் குறித்து பேசப்பட்டது. இதன்போது அடுத்த மாநாடு கூடுகின்ற வரைக்கும் இருக்கின்ற இடைக்காலத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் பணியாற்றுவார் எனவும், மாவை சேனாதிராஜா அரசியல் குழுத் தலைவராகச் செயற்பாடுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது மாவை சேனாதிராஜா ஒரு பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டது.
அரசியல் யாப்புக்களுக்கு அப்பாற்பட்ட பதவிகளில் இருப்பது அர்த்தமில்லை எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.










