புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் !
[2024-12-28 10:55:01] Views:[10]
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் நேற்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.










