yarlathirady.com

யாழ்ப்பாணத்தில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா...!!

[2024-12-27 21:45:00] Views:[11]

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

அத்துடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சபரிமலை யாத்திரைக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையைப் பெற்றுத்தருமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.