கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து இயக்கச்சியில் விபத்துக்குள்ளாகியது.
[2024-12-27 11:35:41] Views:[13]
இன்று (27) காலை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்தின் சாரதி பக்க சில்லு அச்சுடன் உடைத்து கழன்று சென்றதில் இவ்விடத்து நிகழ்ந்துள்ளது. பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சில்லு அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது மோதியதால் அதன் சாரதி நிலைகுலைந்ததில் பட்டாவும் விபத்துக்குள்ளாகியது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










