புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை..!!
[2024-12-26 21:53:33] Views:[12]
இன்று (26) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இது புதிய அதிகரிப்பு என்று கூறப்படுகின்றது. இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
மேலும், 23ஆம் திகதி வர்த்தக நாளில் காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










