ஆற்றுக்கு சென்ற பெண் முதலை தாக்கி மரணம்...!
[2024-12-26 21:10:41] Views:[11]
களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரையே இவ்வாறு முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர் மக்கள் படகுகள் மூலம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சடலம் மீட்கப்பட்டார்.










