யாழ்பாணத்தில் நடைபெற்ற நத்தார் தின ஆராதனை.
[2024-12-25 11:05:43] Views:[9]
யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையிலான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில், (24) நள்ளிரவு சிறப்பாக இடம்பெற்றது.
யேசுபாலனின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு கத்தோலிக்க பொதுமக்கள் ஆராதனை நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட 51வது இராணுவ தலைமையகம் மற்றும் யாழ். மறை மாவட்ட ஆயர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் நிகழ்வுகள் வெகு விசமர்சையாக இடம்பெற்றன.










