yarlathirady.com

விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்...!

[2024-12-24 21:11:46] Views:[11]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வீடுகள், நெடுஞ்சாலைகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

சேதமடைந்த நெற்பயிர்களில் 2.5 அல்லது 3 மாத நெல் ரகங்கள் அல்லது பொருத்தமான குறுகிய கால பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கு தேவையான முட்டை அரிசி மற்றும் விதைகளை வழங்க முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கடபட்டுள்ளது.

தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்ச்செய்கையில் 02 ஹெக்டேயர் வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000/= வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் சோயாபீன் ஆகிய 01 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரையிலான 05 வகையான பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000/= நஷ்டஈடு வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.