yarlathirady.com

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி;

[2024-12-24 09:11:04] Views:[11]

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் வசதிகருதி விசேட பேருந்து மற்றும் ரயில் சேவளை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் முடியும் வரை தினமும் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு அனைத்து டிப்போ மேலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் கொழும்புக்கு வருவதற்காக பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலத்தையொட்டி, விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.

இதன்படி, டிசம்பர் 28ஆம் திகதி காலை பதுளைக்கு விசேட புகையிரதமும், 29ஆம் திகதி இரவு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட புகையிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக யாழ். தேவி விரைவு ரயிலுடன் யாழ்ப்பாணம் வரை நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலையும் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.