யாழ்பாணத்தில் கரையொதுங்கிய ஆளில்லாத படகு...!!
[2024-12-23 21:12:09] Views:[9]
யாழ் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் ஆளில்லாத படகொன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகு இன்று(23) காலை கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், குறித்த படகு ஆட்கள் யாருமற்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கரையொதுங்கிய குறித்த படகு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










