ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து - 53 பேர் காயம் - மூவர் உயிரிழப்பு!
[2024-12-22 16:25:57] Views:[9]
நேற்றையதினம் (21) ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது
விபத்தில் பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










