yarlathirady.com

இந்தியாவில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு...!!

[2024-12-22 10:26:47] Views:[9]

கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் விடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றவேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்துள்ளனர். இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தநிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.