யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - இளைஞர் மரணம்
[2024-12-21 11:23:39] Views:[12]
நேற்றைய தினம் (20) யாழ். ஊர்காவற்துறையில் வீதியில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் , மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










