வவுனியாவில் வாகன பற்றரிகள் திருட்டு
[2024-12-17 19:38:54] Views:[11]
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வாகன பற்றரிகளை தொடர்ச்சியாக திருடிய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
வாகன பற்றரிகள் குறித்த வாகன தரிப்பிடத்தில் களவாடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளி யாகியுள்ளது.










