யாழ்ப்பாணத்தில் விபத்து - தந்தை உயிரிழப்பு மகன் மருத்துவமனையில்
[2024-12-16 12:31:15] Views:[14]
நேற்று (15) இரவு யாழ். இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 76 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.










