அதிகரித்துவரும் எலிக்காய்ச்சல் - முல்லைத்தீவில் அறிவுறுத்தல்
[2024-12-15 12:19:00] Views:[9]
எலிக்காய்ச்சல் நோயினால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் இன்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
தற்போதைய பருவ மழையினை தொடர்ந்து எமது பகுதியிலும், எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இது லெப்டோஸ்பைரா எனும் பக்றீரியாவால் ஏற்படுகின்றது. விலங்குகள் மூலம் பரவும் கொடிய தொற்று நோயாகும். எலிகள், அகிளான் உட்பட கொறிப்பான்கள் மற்றும் கால்நடைகளின் சிறுநீருடன் வெளியேறும் பக்ரீயா கிருமி தொற்றினால் இந் நோய் ஏற்படுகின்றது. வயல், சேற்று நிலங்களில் விலங்குகளின் சிறுநீர் மூலம் தொற்றடைந்த தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் விவசாயிகள், கால்நடைவளர்போர் எலிகாய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தோலில் உள்ள காயங்கள், உராய்வுகள், கண், மென்சவ்வுகள் மூலம் நேரடியாகவும், விலங்குகளின் சிறுநீர் மூலம் தொற்றடைந்த உணவுகள், குடிநீர் மூலமும் இவ் நோய்கிருமி மனிதருக்கு தொற்றுகின்றது. அவசியமற்ற சந்தர்பங்களில் வயல் தண்ணீரில், சேற்று நிலங்களில் நிற்பதை தவிர்க்கவும்,
வயல் நிலைகளை அண்டியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும், வீடுகள், வயல் நிலங்களில் எலிகள் தங்காதபடி கற்குவியல்கள், குப்பைகூழங்களை துப்பரவவு செய்யுங்கள், கொதித்தாறிய தண்ணீரை பருகவும், குடிநீர், உணவு பொருட்களுடன் எலிகள் தொடர்புபடும் சந்தர்பங்களுடன் அவவதானமாக இருங்கள், காய்ச்சல், தலையிடி, வயிற்றுநோ, தசை நோ, குமட்டல், வாந்தி, கண்சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகள் டெங்கு போன்ற வேறு நோய்களுக்கும் பொதுவானவை என்பதனால் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியமானது. என அறிவுறுத்தப்பட்டுள்ளது.










