yarlathirady.com

மீண்டும் தாழமுக்கம்- மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

[2024-12-15 10:46:11] Views:[10]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போது நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மைய அமுக்கம் தற்போது 1004 மில்லி பார் ஆக உள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் இதுதொடர்பாக குறிப்பிடுகையில் இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் தமிழக கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது அதனை விட தீவிரமாக மாறி எதிர்வரும் 18ம் திகதி அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தாழ்வுநிலை காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.எதிர்வரும் 15-18 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 17, 18 மற்றும் 19ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் குளங்கள் மீண்டும் வான் பாயக்கூடும்.


இது இவ்வாண்டு வடகீழ் பருவக்காற்று காலத்தில் குளங்கள் வான் பாய்கின்ற மூன்றாவது சந்தர்ப்பமாக அமையக்கூடும்.எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மேற்குறிப்பிட்ட காலங்களில் கிடைக்கவுள்ள கன மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் நாளை பிற்பகல் முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. எதிர்வரும் 17 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.