யாழிலிருந்து கொழும்பு சென்ற வேன் கிளிநொச்சியில் விபத்து!
[2024-12-14 20:08:04] Views:[11]
கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனுமே விபத்துக்குள்ளாகியுள்ளதாககவும் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










