கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
[2024-12-14 10:57:25] Views:[9]
நேற்று (13) இரவு 7.00 மணியளவில் கற்பிட்டி - பாலவியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.










