நான்கு இலங்கை தமிழர்கள் இந்தியாவில் கைது
[2024-12-13 11:00:39] Views:[9]
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற நான்கு இலங்கை தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் பொலீஸார் ரோந்துப் பணியின் போது பயண பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த நான்கு இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதாகவும் நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.










