காரைநகர் கசூரினா கடற்கரை பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு - கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
[2024-12-12 08:41:31] Views:[13]
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய காரைநகர் கசூரினா கடற்கரை பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கேரள கஞ்சா பொதிகள் படகின் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சுமார் 213 கிலோகிராம் கேரள கஞ்சா உடைய பொதிகள் சுமார் 93 , படகு ஒன்று மற்றும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










