சிவாஜிலிங்கத்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்
[2024-12-11 08:55:40] Views:[10]
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை சேர்க்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றநிலையில், அவர் கடந்த சனிக்கிழமை தொடக்கம் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனினும், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளததாக கூறப்படுகிறது.










