குளிரூட்டப்பட்ட ரயில் சேவை - யாழிலிருந்து கொழும்பு வரை
[2024-12-07 19:20:26] Views:[11]
எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக யாழிலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையை முன்னெடுத்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இதுவரை காலமும் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
காலை 5.30 மணிக்கு ஒவ்வொரு நாளும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும். பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது. யாழிலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.










