வவுனியாவின் தற்போதைய காலநிலை!
[2024-12-06 10:22:32] Views:[9]
நேற்று மாலை வவுனியாவில் , கடும் மழை பொழிந்ததன் பின் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










