yarlathirady.com

பலாலி இராஜேஸ்வரி ஆலய வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி பங்கேற்பு;

[2024-12-05 07:13:59] Views:[10]

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (4) இடம்பெற்ற பூஜை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க நேற்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.