யாழில் கேரளக் கஞ்சா மீட்பு
[2024-12-04 14:49:41] Views:[11]
இன்று (04) அதிகாலை யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து சுமார் 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 92 பொட்டலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொட்டலங்கள் என்பன யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.










