அஸ்வெசும கொடுப்பனவு - பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்
[2024-12-03 14:37:44] Views:[11]
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும், மிக வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 17,500 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










