பயங்கர விபத்து - வவுனியாவில்சம்பவம்!
[2024-12-03 09:12:46] Views:[12]
நேற்றையதினம் (02) வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.










