yarlathirady.com

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த புலம்பெயர் தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

[2024-12-01 17:54:56] Views:[11]

பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30.11.2024) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் அவரை பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.