மோட்டார் சைக்கிள் கார் விபத்து; பிறப்பு, இறப்பு பதிவாளர் பலி!
[2024-12-01 17:20:53] Views:[12]
யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் தாவடி, சுதுமலைப் பகுதியில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (64 வயது) என்பவரே என தெரியவந்துள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










