52 வயது நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
[2024-12-01 11:43:04] Views:[11]
இரத்தினபுரி, நல்லத்தண்ணி பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
28 ஆம் திகதி குறித்த மாணவியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் 29 ஆம் திகதி ஆஜர்படுத்தபட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர கூறுகையில் கூறுகையில்,
சந்தேக நபர் நல்லதண்ணி தோட்டத்தில் உள்ளவர் எனவும் அவருக்கு மேலும் ஒரு வீடு லக்சபான தோட்ட முள்ளு காமம் கீழ் பிரிவில் உள்ளது எனவும், அங்கு சென்று வருகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தொடர்பினால் இந்த சம்னும் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவியின் தாயார் நல்ல தண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதியில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு பாடசாலை செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.










