எரிபொருட்களின் விலையில் மாற்றம்!
[2024-12-01 06:10:24] Views:[14]
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.
டீசலின் விலை 03 ரூபாவினால் திகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










