தீயில் சிக்கிய தாய் ஒருவர் உயிரிழப்பு.!
[2024-11-30 17:49:57] Views:[10]
முல்லைத்தீவில் தனியாக வசித்து வந்த தாய் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 75 வயதான ஒருவரே நேற்று (29) பிற்பகல் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ள அவா் குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.
பிரேத பரிசோதனைக்காக உடல் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










