யாழ். மாவட்டத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
[2024-11-29 16:55:50] Views:[9]
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் குறித்த பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்தார்.
மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பனவற்றுக்காக ரூபா. 11 மில்லியனும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.










