தீவக நோயாளர்கள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!
[2024-11-29 05:56:35] Views:[11]
யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேற்று (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவிலிருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தரைவழியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.










