ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது;
[2024-11-28 20:16:19] Views:[11]
நாட்டி நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
அடை மழை காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியமையினால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் என இன்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.










