ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது ! மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிப்பு;
[2024-11-27 17:35:56] Views:[12]
நாட்டில் நிலவும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி ஓமந்தையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
இதன்படி, ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.










